நாடாளுமன்றத் தேர்தல், 18 தொகுதி சட்டப்பேரவைஇடைத்தேர்தலுக்கான தங்கள் கட்சி வேட்பாளர்களை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதில், நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களில் 20 தொகுதிகளில் இரண்டு பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். தூத்துக்குடி வேட்பாளராகக் கனிமொழியும், தென் சென்னை வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் (சுமதி)என்பவரும் போட்டியிட உள்ளனர். ஆனால், 18 தொகுதி சட்டப்பேரவைஇடைத்தேர்தலில் ஒரு பெண் வேட்பாளர் கூட இடம்பெறவில்லை.
திமுக, பெண்களுக்கு எப்போதும் பிரதிநிதித்துவம் கொடுத்துவரும் கட்சி என்பது பலரின் கருத்தாக உள்ள நிலையில், அக்கட்சியின் இந்த அறிவிப்பு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கடந்த கால தேர்தலைக் கவனித்தால், தஞ்சாவூர் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த அஞ்சுகம் பூபதி, சித்திரைச் செல்வி போன்றவர்கள் கணிசமான வாக்குகள் பெற்றிருந்தனர்.
இதுபோன்று திமுக வேட்பாளராகப் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கியுள்ளார் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி.
இதைப்பற்றி திமுக தலைவர் ஸ்டாலினிடம் கேட்டபோது, "20 தொகுதியில் இரண்டுதொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கருணாநிதி வழியைத்தான் கையாண்டு உள்ளோம்" என பதிலளித்தார்.