கரோனா தொற்று தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டதால், பேரிடர் மேலாண்மை சட்டப்படி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாயும், தொற்று பாதிக்கப்பட்ட வயது வந்தவர்களுக்கு நாளொன்றுக்கு 60 ரூபாயும், மற்றவர்களுக்கு நாளொன்றுக்கு 45 ரூபாயும் நிவாரண உதவியாக வழங்க உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் வர்த்தக பிரிவு செயலாளர் தனசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆனால், கரோனா பாதித்தவர்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இந்நிலையில், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே இவ்வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்வதற்கான காரணங்களை நிரூபிக்க மனுதாரர் தவறி விட்டதாகக் கூறி மறு ஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: டூப் ஸ்டாலின் காலில் விழுந்து குறைகளை கூறிய மூதாட்டி!