உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்த திமுக மூத்தத் தலைவர் க. அன்பழகனுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவர், அக்கட்சியின் பொதுச்செயலாளர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்துவரும் பன்முகத் திறமைக்கொண்டவருமான பேராசிரியர் க. அன்பழகன் இயற்கை எய்தியுள்ளார். அந்தச் செய்தியை கேட்டு, மிகவும் வேதனையடைந்தேன்.
அவரின் மறைவு திமுகவிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும், அவரின் குடும்பத்தாருக்கும், திமுக கட்சியினருக்கும் தேமுதிக சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: க. அன்பழகன் மறைவு: ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு வெங்கையா இரங்கல்