ETV Bharat / state

தீபாவளி சிறப்பு பேருந்துகள் - பயணிகள் அறிந்துகொள்ள வேண்டியவை! - பயணிகள் அறிந்துகொள்ள வேண்டி முக்கிய விவரம்

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு எந்த பேருந்து நிலையத்தில் இருந்து எந்த வழித்தட பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்ற விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.

தீபாவளி சிறப்பு பேருந்துகள்
author img

By

Published : Oct 22, 2019, 5:34 PM IST

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்வார்கள் என்பதால் பயணிகளின் வசதிக்காக வரும் அக்டோபர் 24 முதல் 26 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,225 பேருந்துகளுடன் கூடுதலாக 4,265 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல் திருப்பூர், கோவை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்து 8,310 சிறப்பு பேருந்துகள் உட்பட 10 ஆயிரத்து 646 பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கடந்தாண்டு தீபாவளியைப் போலவே இந்தாண்டும் ஐந்து பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி, ஆந்திரா செல்லும் தமிழ்நாடு, ஆந்திர மாநில பேருந்துகள் அனைத்தும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர்) வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் மாநகரப் பேக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் (மெப்ஸ்) இருந்து புறப்படும்.

திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், மதுராந்தகம், போரூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ரூட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், கடலூர், காட்டுமன்னார்கோயில், புதுச்சேரி செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், சித்தூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தனி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

இதுதவிர மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், விருதுநகர், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், பெங்களூரூ உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்பவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சென்று ஏற வேண்டும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

அதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து பிற இடங்களுக்கு செல்வதற்காக 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மொத்தம்13,527 பேருந்துகள் இயக்கப்படும்.

தீபாவளி பேருந்துகளுக்கான முன்பதிவுக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 கணினி முன்பதிவு நிலையங்களும், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இரண்டு முன்பதிவு நிலையங்களும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு நிலையமும் என மொத்தம் 30 முன் பதிவு நிலையங்கள் தொடங்கப்படவுள்ளன. இதனை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 24 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்பவர்கள் www.tnstc.in என்ற இணையதளத்திலும், ரெட் பஸ், பஸ் இண்டியா, கோ ஐபிபோ ஆகிய இணையதளங்களிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம். பேருந்து இயக்கம் குறித்த தகவல்களுக்கும் புகார்களுக்கும் 94450 14450 என்ற தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை!

Intro:
சென்னை:

தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் பல்வேறு நகரங்களுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துக்கள் இயக்கப்படவுள்ளன. சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் வெளியூருக்குச் செல்லும் பேருந்துக்கள் 5 பேருந்து நிலையங்களில் இருந்து செல்கின்றன. எந்த ஊருக்கு எங்கு சென்று ஏற வேண்டும் என்ற விபரம்:
Body:தீபாவளி பண்டிகையின் போது ஏராளமான மக்கள் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்று கொண்டாடுவர் என்பதால் மக்களின் வசதிக்காக வரும் அக்டோபர் 24 முதல் 26 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,225 பேருந்துகளுடன் கூடுதலாக 4,265 சிறப்பு பேருந்துகள் என மொத்தம 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதேபோல், பிற முக்கிய ஊர்களில் இருந்து 8,310 சிறப்பு பேருந்துகள் உட்பட 10 ஆயிரத்து 646 பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கடந்தாண்டு தீபாவளியைப் போலவே இந்தாண்டும் ஐந்து பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

அதன்படி,

ஆந்திரா செல்லும் தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அனைத்தும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர்) வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் மாநகரப் பேக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சேனிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் (மெப்ஸ்) இருந்து புறப்படும்.

திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் மதுராந்தரகம், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி, வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ரூட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், கடலூர், காட்டுமன்னார்கோயில், புதுச்சேரி செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், சித்தூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தனி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

மேற்கட்ட ஊர்களுக்கு 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள் குறிப்பிட்ட பேருந்து நிலையம் சென்று ஏற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், விருதுநகர், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், பெங்களூரூ உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்பவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில சென்று ஏற வேண்டும் என்றும் போக்குவரத்துறை துறை தெரிவித்துள்ளது.

அதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் சென்னைக்கு மற்ற முக்கிய நகரங்களில் இருந்து பிற இடங்களுக்கு செல்வதற்காக 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மொத்தம்13,527 பேருந்துகள் இயக்கப்படும்.

தீபாவளி பேருந்துகளுக்கான முன்பதிவுக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 கணினி முன்பதிவு நிலையங்களும், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இரண்டு முன்பதிவு நிலையங்களும், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு நிலையமும் என மொத்தம் 30 முன் பதிவு நிலையங்கள் தொடங்கப்படவுள்ளன. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 24 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்பவர்கள் www.tnstc.in என்ற இணையதளத்திலும், ரெட் பஸ், பேட எம், பஸ் இண்டியா, கோ ஐபிபோ ஆகிய இணையதளங்களிலும் முன் பதிவு செய்துகொள்ளலாம். பேருந்து இயக்கம் குறித்த தகவல்களுக்கும், புகார்களுக்கும் 9445014450 என்ற தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.

If possible use graphics card.

Use file photo/ visuals
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.