தீபாவளியைக் கொண்டாடப் பலரும் சொந்த ஊர் செல்வது வழக்கம். இந்தாண்டு தீபாவளி வரும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாள் வேலைநாள் என்பதால் ஊர் திரும்பச் சிரமமாக இருக்கும் என்றும் அதனால் திங்கள்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்தனர்.
இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28ஆம் தேதி (திங்கள்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 9ஆம் தேதியைப் பணி நாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் தீபாவளிக்குத் தமிழ்நாடு முழுவதும் சனி, ஞாயிறு, திங்கள்கிழமை என மூன்று நாள்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு!