ETV Bharat / state

500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு - change consultation

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் 500 ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

date-announced-for-change-consultation-for-500-teacher-trainers
500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு
author img

By

Published : Sep 14, 2021, 9:27 AM IST

சென்னை: இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "பள்ளிக் கல்வித் துறையில் 2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில, மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார, தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் 500 ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு பணிமாறுதல் வழங்கப்பட உள்ளது.

ஆசிரியர் பயிற்றுனர்களாக உள்ளவர்கள் பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெறுவதற்கு 15ஆம் தேதியும், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 20ஆம் தேதியும் நடைபெறும். ஒரே ஆசிரியர் மீண்டும் விண்ணப்பித்தால் நீக்கப்படும்.

பொது மாறுதல் விண்ணப்பத்தில் மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் இரண்டும் சேர்த்தும் ஒரே விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கப்பட வேண்டும். ஓர் ஆசிரியர் பயிற்றுனர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டால் அவரது பெயர் கணினியில் தானாகவே முழுமையாக நீக்கப்பட்டுவிடும் என்பதால் அவர் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளமுடியாத நிலை ஏற்படும். எனவே, இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

கட்டாய பணியிட மாற்றம்

பணிமூப்பு அடிப்டையில் பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் செய்யப்படவேண்டிய மூத்த ஆசிரியர், பயிற்று பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து ஆசிரியர் பயிற்றுனர்களும் , பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதலுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

கலந்தாய்வில் கலந்து கொள்ளாமல் இருந்தாலோ அல்லது இடத்தை தேர்வு செய்யாது இருந்தாலோ பள்ளிக்கல்வி இணை இயக்குநரால் (பணியாளர் தொகுதி)காலியாக உள்ள ஒரு பள்ளிக்கு பணி மாறுதல் ஆணை வழங்கப்படும். இதில் விருப்பமின்மை தெரிவித்தால் அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

கலந்தாய்வுக்கு வருகை தரும் ஆசிரியர் பயிற்றுனர்களின் எண்ணிக்கைக்கேற்ப, கலந்தாய்வு நடைபெறும் மையங்களில் அமருவதற்கு இருக்கை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நிரப்பத் தகுந்த காலிப்பணியிட விவரங்களை அறிவிப்புப் பலகையில் ஆசிரியர் பயிற்றுனர்களின் பார்வைக்காக ஒட்டிவைத்தல் வேண்டும்.

கலந்தாய்வு தொடங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னரே கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர் பயிற்றுனர்கள் மையத்தில் இருக்கவேண்டும். கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர் பயிற்றுனர்கள் தவிர, மற்றவர்களை கலந்தாய்வு நடைபெறும் அறையில் அனுமதிக்கக்கூடாது.

மேலும், கரோனா வைரஸ் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், இது தொடர்பாக உரிய வழிகாட்டுதல்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் வழங்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மாற்றுதிறன் மாணவர்களுக்கு கற்பிக்கும் சிறப்பு பயிற்றுனர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.