சென்னை: மேடவாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனியார் வணிக வளாகத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது பென் தோழி ஒருவருடன், மெரீனா பகுதியில் மாலை நேரத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்குவந்த இளைஞர் ஒருவர், தன்னை போலீஸ் என கூறி இருவரையும் தனது செல்போனில் போட்டோ எடுத்துள்ளார். அதன் பிறகு, இருவரையும் உங்கள் வீட்டுக்கு இந்த புகைப்படத்தை அனுப்பி விடுவேன்.
மேலும், சமூக வலைதளங்களிலும் பரப்பிவிடுவேன். இதனால், உங்கள் குடும்ப வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடும். நான் அவ்வாறு செய்யாமலிருக்க ரூ.15 ஆயிரம் கொடுங்கள் என கூறி மிரட்டியுள்ளார். இதனால், அவர்கள் பயந்து என்ன செய்வது, தெரியாமல், தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியதோடு, தங்களது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.12 ஆயிரத்தை ஜீபே மூலம் அந்த நபருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரின் தொடர் விசாரணையில் `போலீஸ்' எனக்கூறி பணம் பறித்தவர் சென்னை நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த அசர் அலி (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.12,000 மற்றும் குற்றச் சம்பவத்துக்குப் பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
கூலிப்படையினர் கைது: வில்லிவாக்கம் சிட்கோ நகர், 2ஆவது பிரதான சாலையை சேர்ந்தவர் சோழன். இவரது வீட்டில் கடந்த 22ஆம் தேதி அதிகாலை நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், 70 சவரன் நகை, ரூ.3.50 லட்சம் ரூபாய் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர். தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், குற்றம் செய்யப்பட்டவர்கள் சோழனின் அக்கா மகன் ராமர் (45), மேற்கு முகப்பேர் முகமது பக்ருதீன் (42), கொரட்டூர் ராதா (47) ஆகியோர் கூலிப்படையை வைத்து சோழன் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது.
தொடர்ந்து அந்த மூவரையும் கைது செய்த காவல் துறையினர், கூலிப்படையைச் சேர்ந்த புருஷோத்தமன் (23), ராஜீ (29), திலீப் (24) ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
பெண்கள் விடுதிக்குள் சென்ற காவலாளி கைது: அமப்த்தூர் பகுதியைச் சேர்ந்த ஜான் என்பவர் ராயப்பேட்டையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர், தனியாக இருக்கும் பெண்கள் வீட்டிற்குள் சென்று உள்பக்கம் தாள் இட்டுள்ளார். இதனால், அங்கு இருக்கும் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள, அவரை பால்கனியில், தள்ளிவிட்டு, அந்த கதவை பூட்டினார்.
இதைத் தொடர்ந்து, ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் காவலாளியை கைது செய்தனர்.
தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரனையில் அவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவரும், காவலாளி என்பவரும், இவரின் மேல் சில வழக்குகள் நிலுவலையில் உள்ளதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: விஷ மருந்தால் 250-க்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழப்பு.. மூவர் கைது!