சென்னை: மக்கள் நல்வாழ்வுத் துறை ஜூலை 9ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 494 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 3 ஆயிரத்து 38 பேருக்கும், மேற்கு வங்கத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவரும் என 3 ஆயிரத்து 39 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 33 லட்சத்து 93 ஆயிரத்து 845 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 25 லட்சத்து 13 ஆயிரத்து 98 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
படிப்படியாக குறையும் கரோனா
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 33 ஆயிரத்து 224 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 3 ஆயிரத்து 411 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 46 ஆயிரத்து 552 என உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் 18 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 51 நோயாளிகளும் என மேலும் 61 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்து 322ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை எண்ணிக்கையின் அடிப்படையில், மாவட்டவாரியாக பாதிப்பு எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நீலகிரியில் 4.9 விழுக்காடு, சென்னையில் 0.7 விழுக்காடு, மதுரையில் 0.4 விழுக்காடு என பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு | |
மாவட்டங்கள் | கரோனா பாதித்தோர் எண்ணிக்கை |
சென்னை | 5,34,557 |
கோயம்புத்தூர் | 2,24,376 |
செங்கல்பட்டு | 1,58,729 |
திருவள்ளூர் | 1,11,895 |
சேலம் | 90,502 |
திருப்பூர் | 84,975 |
ஈரோடு | 91,168 |
மதுரை | 72,897 |
காஞ்சிபுரம் | 70,779 |
திருச்சிராப்பள்ளி | 70,702 |
தஞ்சாவூர் | 65,197 |
கன்னியாகுமரி | 59,447 |
கடலூர் | 58,763 |
தூத்துக்குடி | 54,559 |
திருநெல்வேலி | 47,378 |
திருவண்ணாமலை | 50,547 |
வேலூர் | 47,326 |
விருதுநகர் | 45,013 |
தேனி | 42,575 |
விழுப்புரம் | 43,013 |
நாமக்கல் | 45,788 |
ராணிப்பேட்டை | 41,381 |
கிருஷ்ணகிரி | 40,603 |
திருவாரூர் | 37,218 |
திண்டுக்கல் | 31,822 |
புதுக்கோட்டை | 27,460 |
திருப்பத்தூர் | 27,756 |
தென்காசி | 26,567 |
நீலகிரி | 29,215 |
கள்ளக்குறிச்சி | 27,879 |
தர்மபுரி | 25,267 |
கரூர் | 22,305 |
மயிலாடுதுறை | 20,430 |
ராமநாதபுரம் | 19,785 |
நாகப்பட்டினம் | 18,037 |
சிவகங்கை | 18,156 |
அரியலூர் | 15,282 |
பெரம்பலூர் | 11,240 |
கரோனா பாதித்த பயணிகள் விவரம்
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1006
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்- 1075
ரயில் மூலம் வந்தவர்கள் -428
இதையும் படிங்க: குமரி-கேரள எல்லையில் கர்ப்பிணி உள்பட 14 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு!