ETV Bharat / state

சென்னையில் 66 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு! - corona crisis in chennai

சென்னை: சென்னையில் இதுவரை 66 ஆயிரத்து 538 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Jul 5, 2020, 12:23 PM IST

பெரும்பாலும் கரோனா வைரஸ் மக்கள் திரள் அதிகமாகக் காணப்படும் பெருநகரங்களில்தான் தன் தீவிரத்தைக் காட்டிவருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னையில் கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவிவருகிறது. இந்தப் பரவலைத் தடுக்க ஜூலை 5ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. மேலும் மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருப்பினும், நாள்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துவருகிறது. அதிகளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதே இதற்குக் காரணம் என மாநகராட்சி தெரிவிக்கிறது. நேற்று (ஜூலை 4) மட்டும் 11 ஆயிரத்து 114 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

மண்டல வாரியாக கரோனா பாதிப்பு:

ராயபுரம்8,766 நபர்கள்
தண்டையார்பேட்டை7,487 நபர்கள்
தேனாம்பேட்டை 7,438 நபர்கள்
கோடம்பாக்கம் 7,159 நபர்கள்
அண்ணா நகர் 7,284 நபர்கள்
திருவிக நகர் 5,417 நபர்கள்
அடையாறு 4,137 நபர்கள்
வளசரவாக்கம்3,128 நபர்கள்
அம்பத்தூர்2,945 நபர்கள்
திருவொற்றியூர் 2,643 நபர்கள்
மாதவரம் 2,166 நபர்கள்
ஆலந்தூர் 1,786 நபர்கள்
பெருங்குடி1,734 நபர்கள்
சோளிங்கநல்லூர் 1,424 நபர்கள்
மணலி1,171 நபர்கள்
மொத்தம்66,538 நபர்கள்

சென்னையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 58.63 விழுக்காடு ஆண்களும், 41.37 விழுக்காடு பெண்களும் அடங்குவர். இதுவரையில், 41 ஆயிரத்து 309 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்த மருத்துவருக்கு உதவிய முதலமைச்சர் - நன்றி தெரிவித்த அரசு மருத்துவர்கள் சங்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.