மக்கள் நல்வாழ்வு துறை டிசம்பர் 23ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 70 ஆயிரத்து 534 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆயிரத்து 62 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 2 பேருக்கும், பிகார் மற்றும் பங்களாதேஷில் இருந்து வந்த தலா ஒருவருக்கு என மொத்தம் 1,066 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 10 ஆயிரத்து 80ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த 1,131 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 88 ஆயிரத்து 742ஆக உயர்ந்துள்ளது. அதுபோல இன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோரில் 4 பேர், அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் என மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 12,024 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:
- சென்னை - 2,23,209
- கோயம்புத்தூர் - 51596
- செங்கல்பட்டு - 49,486
- திருவள்ளூர் - 42307
- சேலம் - 31222
- காஞ்சிபுரம் - 28478
- கடலூர் - 24,554
- மதுரை - 20374
- வேலூர் - 20071
- திருவண்ணாமலை - 19056
- தேனி - 16819
- தஞ்சாவூர் - 16943
- திருப்பூர் - 16742
- விருதுநகர் - 16250
- கன்னியாகுமரி - 16212
- தூத்துக்குடி - 15984
- ராணிப்பேட்டை - 15846
- திருநெல்வேலி - 15196
- விழுப்புரம் - 14905
- திருச்சிராப்பள்ளி - 13979
- ஈரோடு - 13414
- புதுக்கோட்டை - 11356
- கள்ளக்குறிச்சி - 10778
- திருவாரூர் - 10827
- நாமக்கல் - 11037
- திண்டுக்கல் - 10786
- தென்காசி - 8215
- நாகப்பட்டினம் - 8014
- நீலகிரி - 7836
- கிருஷ்ணகிரி - 7765
- திருப்பத்தூர் - 7387
- சிவகங்கை - 6470
- ராமநாதபுரம் - 6290
- தர்மபுரி - 6329
- கரூர் - 5088
- அரியலூர் - 4624
- பெரம்பலூர் - 2254
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 929
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1024
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: 6 மாதத்திற்கு மட்டும் தான் அம்மா மினி கிளினிக்கா?