மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை இன்று (டிச. 02) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் புதிதாக 68 ஆயிரத்து 388 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் இருந்த 1,421 நபர்களுக்கும், தமிழ்நாட்டிற்கு சிங்கப்பூரிலிருந்து வந்த ஒருவருக்கும், கேரளா, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், வங்கதேசம், அஸ்ஸாம், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வந்த தலா ஒருவருக்கும் என 1,428 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 19 லட்சத்து இரண்டாயிரத்து 345 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் ஏழு லட்சத்து 84 ஆயிரத்து 747 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 10 ஆயிரத்து 999 நபர்கள் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 1,398 நபர்கள் இன்று வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஏழு லட்சத்து 62 ஆயிரத்து 15 என உயர்ந்துள்ளது. இன்று சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் ஆறு நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் ஐந்து நோயாளிகளும் என 11 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 733 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 397 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:
சென்னை - 2,16,119
கோயம்புத்தூர் - 49,010
செங்கல்பட்டு - 47,790
திருவள்ளூர் - 41,084
சேலம் - 30,006
காஞ்சிபுரம் - 27,758
கடலூர் - 24,260
மதுரை - 19,769
வேலூர் - 19,420
திருவண்ணாமலை - 18,680
தேனி - 16,604
தஞ்சாவூர் - 16,488
விருதுநகர் - 15,928
தூத்துக்குடி - 15,707
கன்னியாகுமரி - 15,730
ராணிப்பேட்டை - 15,640
திருநெல்வேலி - 14,880
விழுப்புரம் - 14,643
திருப்பூர் - 15,515
திருச்சிராப்பள்ளி - 13,472
ஈரோடு - 12,506
புதுக்கோட்டை - 11,146
கள்ளக்குறிச்சி - 10,681
திண்டுக்கல் - 10,363
திருவாரூர் - 10,491
நாமக்கல் - 10,478
தென்காசி - 8,091
நாகப்பட்டினம் - 7,669
திருப்பத்தூர் - 7,270
நீலகிரி - 7,466
கிருஷ்ணகிரி - 7,418
ராமநாதபுரம் - 6,219
சிவகங்கை - 6,329
தருமபுரி - 6,102
அரியலூர் - 4,570
கரூர் - 4,846
பெரம்பலூர் - 2,244
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 927
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,000
ரயில் மூலம் வந்தவர்கள் - 428