சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு எழுதிய புத்தகமான 'குறள் அமுது கதை அமுது' மற்றும் அவரது துணைவியார் தனுஷ்கோடி லாவண்யா ஷோபனா எழுதிய 'காக்கிச் சட்டை' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் ஈஸ்வர மூர்த்தி, நடிகர் தாமு, பேச்சாளர் சுகி சிவம் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்வில் ஏ.கே. விஸ்வநாதன் இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டார். நிகழ்வில் பேசிய சுகி சிவம், காவல்துறையினரை பொதுமக்கள் இகழ்ந்தாலும், பாராட்டினாலும் எல்லாவற்றையும் சமமாக நினைக்கின்ற மனோநிலைக்கு காவல்துறையினர் வந்துவிடுவார்கள்.
காவல் ஆணையர் அருகில் உட்கார்ந்திருந்தபோது நான் அவர் பள்ளியில் படிக்கும் போது உரையாற்றியதாக நினைவு கூர்ந்தார். அதற்கு தமிழ்படித்தவர்கள் ஓய்வு எடுத்ததாக வரலாறே இல்லை என்று நான் தெரிவித்தேன். திருக்குறளை கதையாக எழுதி புத்தகம் வெளியிட்ட ஆணையருக்கும் காவலர்களின் குழந்தைகளின் உணர்ச்சிகளை உணர்வு பூர்வமாக எழுதிய லாவண்யா சோபனா ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" என்றார்.
பின்னர் பேசிய காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்," காவல்துறையை பாரட்டாவிட்டாலும் பரவாயில்லை குற்றம் கூறாமல் இருந்தால் போதுமானது. சுகி சிவத்தை வயதாகிவிட்டது ஓய்வு பெறுங்கள் என்று கூறவில்லை. நான் சிறு வயதில் பல பேச்சாளர்களின் பேச்சை கேட்டுள்ளேன்.
ஆனால் மனதில் நீங்காத அளவிற்கு ஒரு சிலரின் பேச்சு உள்ளது. அதில் ஒரு பேச்சாக உங்களுடைய பேச்சு என்று தெரிவித்தேன். காவலர்கள் வேலைப்பளு எவ்வளவு இருந்தாலும் தங்களுக்கு ஆர்வமான செயல்களைச் செய்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். மற்ற துறைகளில் பணிபுரிபவர்கள் பண்டிகை நாட்களில் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து பண்டிகையை கொண்டாடுவார்கள்.
ஆனால், காவல்துறையினர் பண்டிகை நாட்களில் தங்களது குடும்பத்தை பிரிந்து சேவைப்பணியாற்றி வருகிறார்கள். காவல் சீருடை சேவையின் அடையாளமாகத் திகழ்கிறது" என்றார்.
இதையும் படிங்க: எப்போதும் முதலிடத்தில் பொன்னியின் செல்வன்!