ETV Bharat / state

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து! - Lorry Accident

சென்னை: திருவொற்றியூர் எண்ணூர் விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று குடியிருப்புப் பகுதி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

accident
author img

By

Published : Aug 4, 2019, 8:55 AM IST

சென்னை திருவொற்றியூர் எண்ணுார் விரைவுச் சாலையில் சுமார் 48 டன் மதிப்புள்ள பேப்பர் ரோல் கொண்ட கண்டெய்னர் ஒன்று மஸ்தான் கோயில் அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, நிலைதடுமாறிய கண்டெய்னர் பயங்கர சத்தத்துடன் குடியிருப்புப் பகுதி அருகே கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

லாரி கவிழ்ந்து விபத்து

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவொற்றியூர் போக்குவரத்து காவல் துறையினர் துறைமுகத்துக்குச் செல்லக்கூடிய கண்டெய்னர் லாரிகளை மாற்றுப்பாதையில் இயக்கவைத்து அப்பகுதியில் போக்குவரத்தை சீர்செய்தனர்.

இது குறித்து, அப்பகுதி மக்கள் எண்ணுார் விரைவுச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர். கண்டெய்னர் லாரி செல்லும் சாலையை நெடுஞ்சாலைத் துறை சரியாக பராமரிக்கவில்லை எனப் புகார் கூறிய மக்கள், இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.

Intro:சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவுச்சாலையில் சாலையில் இருந்த பள்ளத்தால் துறைமுகத்திற்கு செல்லக்கூடிய கண்டெய்னர் கவிழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுBody:சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள சன் கோ என்ற கன்டெய்னர் முனை முனைமத்தில் இருந்து சுமார் 49 டன் மதிப்புள்ள பேப்பர் ரோல் சென்னை துறைமுகத்திற்கு கொண்டு செல்லும் திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள மஸ்தான் கோயில் அருகே கன்டெய்னர் லாரிகள் செல்லும் சாலையில் பள்ளங்கள் இருப்பதால் இதில் நிலைதடுமாறி கண்டனர் லாரி மற்றும் 40 டன் எடையுள்ள பேப்பர் ரோல் பயங்கர சத்தத்துடன் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்துள்ளது இதில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
மேலும் அப்பகுதி மக்கள் எண்ணூர் விரைவுச்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன மேலும் கன்டெய்னர் லாரி செல்லும் சாலையை சரியாக நெடுஞ்சாலை துறை பராமரிக்கவில்லை எனவும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெற்றியூர் போக்குவரத்து போலீசார் துறைமுகத்துக்கு செல்லக்கூடிய கண்டனர் லாரிகளை மாற்றுப்பாதையில் இயக்கிதால் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.Conclusion:சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவுச்சாலையில் சாலையில் இருந்த பள்ளத்தால் துறைமுகத்திற்கு செல்லக்கூடிய கண்டெய்னர் கவிழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.