தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி சில நாள்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்துவருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக இரண்டு நாள் பயணமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு இன்று (பிப்.10) சென்னை வந்துள்ளது.
இக்குழு இன்று காலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியது. தொடர்ந்து, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர், காவல் கண்காணிப்பு அலுவலர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. சட்டப்பேரவை பொதுத்தேர்தலை அமைதியுடன் நடத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தலின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், இந்திய தேர்தல் ஆணைய அலுவலர்கள் ராஜிவ்குமார், உமேஷ் சின்ஹா, சந்திர பூஷன் குமார், சுஷில் சந்திரா, தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு, தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் ஜே.கே. திரிபாதி, காவல்துறை கூடுதல் இயக்குநர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் ஆலோசனையில் கூட்டத்தில் பங்கேற்றனர். நாளைய தினம் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், மாநில உயர் அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற உள்ளது.
இதையும் படிங்க:ஓ. பன்னீர்செல்வத்தின் சொத்துக்களை மீட்டு மக்களிடம் கொடுப்போம்- உதயநிதி