ETV Bharat / state

பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் விரைவில் குடமுழுக்கு: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு பதில் - chennai seithigal

சட்டப்பேரவை கேள்வி நேரத்தில், பொள்ளாச்சி தொகுதி ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குடமுழுக்கு நடத்தப்படுமா என்ற சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் கேள்விக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

kudamulukku to be held at pollachi masaniyamman temple soon minister shekhar babu reply in assembly
பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் குடமுழுக்கு விரைவில் நடத்தப்படும்: சட்டசபையில் அமைச்சர் சேகர் பாபு பதில்
author img

By

Published : Apr 6, 2023, 7:15 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற கோயிலில் ஒன்று ஆனைமலை மாசாணியம்மன் கோயில். இந்த கோயிலில் அம்மன் சயனநிலையில் இருக்கும் வடிவத்தைக் காண முடியும். இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமாக வருகை புரிந்து வருகின்றனர்.

இன்று (ஏப்-6) சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பொள்ளாச்சி தொகுதி ஆனைமலையில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோயிலில் திருப்பணியுடன் குடமுழுக்கு நடத்தப்படுமா என சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் 12 ஆண்டுகள் ஆகம விதிப்படி குடமுழுக்கு செய்யப்படாத அனைத்து கோயில்களுக்கும் குடமுழுக்கு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அது என்னப்பா நுங்கு வண்டி பந்தயம்..? மதுரை அருகே மாஸ் காட்டிய குழந்தைகள்!

அதன்படி, 668 கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் திருப்பணி ரூ.17 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, விரைவில் குடமுழுக்கு நடத்தப்படுமென அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயிலின் புகழை உலகறிய செய்ய வேண்டும் - தருமபுரி எம்.பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.