ETV Bharat / state

வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம்! - வேளாண் சட்டங்கள்

சென்னை ஆர்.கே. நகரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Sep 28, 2020, 7:30 PM IST

சென்னை: ஆர்.கே. நகர் அருகே மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டக்கங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எஸ்.திரவியம், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தான் ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் விவசாயிகளின் வாழ்வை சீரழிக்கும் இந்த திட்டத்தை ரத்து செய்ய முன்வர வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

வேளாண் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

இதில் காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: வேளான் சட்டத்தை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.