ETV Bharat / state

பிரியங்கா காந்திக்கு ஆதரவாக வலுக்கும் போராட்டம்!

சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

பிரியங்கா காந்தி
author img

By

Published : Jul 20, 2019, 11:09 PM IST

உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வகுப்புவாத சக்திகள் வாரணாசி அருகே உள்ள சோன்பத்ராவில் பழங்குடியின மக்களின் நிலத்தைக் கைப்பற்ற 24 வாகனங்களில் சென்ற வன்முறை கும்பல் 14 பேரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது. படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக சென்ற உத்தரபிரதேச மாநில பொறுப்பாளர் பிரியங்கா காந்தி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

நாகப்பட்டினம்

இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பூகம்பமாக வெடித்தது. அவர்களை சந்திக்காமல் இந்த இடத்தை விட்டு செல்லமாட்டேன் என பிரியங்கா காந்தி இரவு முதல் தர்ணாவில் ஈடுபட்டார். இந்நிலையில், காவல்துறையினர் பிரியங்கா காந்தியை கைது செய்ததைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. திருச்சி, நாகப்பட்டினம், அரியலூர், கன்னியாகுமரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

பிரியங்கா காந்தி மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அவரை விடுதலை செய்யாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என்றும் தெரிவித்தனர். பல்வேறுகட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு சோன்பத்ரா சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரை சந்திக்க பிரியங்காவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியினர்

இதையடுத்து அவர்களை சந்தித்து பேசி ஆறுதல் தெரிவித்த பிரியங்கா, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

Intro:பிரியங்கா காந்தி கைதுக்கு மயிலாடுதுறையில் காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்:-

Body:உத்திரபிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின சாமானிய மக்களின் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்த உத்தரபிரதேச அரசை கண்டித்தும், வன்முறையை கட்டவிழ்த்துவிடும் பாரதிய ஜனதாவின் அராஜக போக்கை கண்டித்து நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.