சென்னை: ஆவடி அடுத்த மிட்டனமல்லி பகுதியைச் சேர்ந்தவர், யூ-ட்யூபர் கார்த்திக் கோபிநாத். இவர், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலை புனரமைப்பதாக கூறி, பல லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக இந்துசமய நிலையத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவரை ஜாமீனில் விடுவிக்கக்கோரி அவரது வழக்கறிஞர்கள் சார்பில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தனர். இன்று மனுவை விசாரித்த நீதிபதி யூ-ட்யூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன் கொடுப்பதாக உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம் கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர், மனு அளித்த நிலையில் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் இரண்டாவதாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கார்த்திக் கோபிநாத் இரண்டு வாரங்களுக்கு ஆவடியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராகி காலை 10:30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: சிகிச்சையை மறைத்து ஏன் திருமணம் செய்தாய்? கணவன் தகராறு: மனைவி தற்கொலை