ETV Bharat / state

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த விபத்துகள், உயிரிழப்புகள்!

வேலூர் அருகே பள்ளி சிறுவன் மீது கார் மோதியது, ஈரோடு அருகே கட்டுமானப் பணி நிகழ்ந்த இடத்தில் கார் கவிழ்ந்து நால்வர் காயம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த விபத்துகள் குறித்து பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த விபத்துகள்

author img

By

Published : Jul 18, 2023, 9:35 PM IST

ஈரோடு: சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய தினேஷ், கல்யாணசுந்தரம், முத்துகுமார் உள்ளிட்ட 4 பேர் காரில் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சிங்கிரிபாளையம் என்ற இடத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கம்பிகளுக்கிடையே கார் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த நால்வரும் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வேலூர்: பள்ளிகொண்டா அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் ரங்கசாமி வயது (55) மற்றும் ஊனை பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த, ஏழாம் வகுப்பு படிக்கும் ஆரமுதன் (13) என்ற மாணவன் ஆகியோர் சாலையோரம் நின்றிருந்த போது, பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த தனியார் ஹோட்டல் உரிமையாளர் குமரவேலின் கார் மோதியதில், ரங்கசாமி மற்றும் பள்ளி மாணவர் ஆரமுதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிகொண்டா காவல் நிலைய போலீசார் குமரவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை: திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, பொறியியல் பட்டதாரி மாதவன் (23). இவர் குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனது நண்பரின் அறையில் தங்கி வேலை தேடியுள்ளார். இந்த நிலையில் (ஜூலை 18) காலை மாதவன் தான் தங்கிருந்த அறைக்கு அருகே இருந்த மின் அழுத்த கம்பியில் ஆடை விழுந்துள்ளது. அதனை எடுக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போலீசார், மாதவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: பொள்ளாச்சி சாலையில், கோவை நோக்கி சென்ற சொகுசு கார், சுந்தராபுரம் காந்தி நகர் அருகே சாலையில் நடுவில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நிகழ்ந்த பிறகு காரில் இருந்த நபர்கள் காரை அப்படியே விட்டுவிட்டுச் சென்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் காரின் கதவைத் திறந்து பார்த்தபோது அதில், மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து சுந்தராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இணைப்புச் சாலையில் ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி நெடுஞ்சாலைக்கு செல்ல திரும்பியுள்ளது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் இருந்து இருசக்கர வாகன உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு வந்த ஈச்சர் லாரி, ஜல்லிக் கற்கள் ஏற்றிச் சென்ற லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஈச்சர் லாரி ஓட்டுநர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் இடிபாட்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஜேசிபியின் உதவியோடு அரை மணி நேரம் போராடி இடிபாட்டில் சிக்கிய ஓட்டுநர் மீட்கப்பட்டார். இது தொடர்பாக நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: போதையால் பறிபோன உயர் - முதல் மாடியில் இருந்து குதித்த இளைஞர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.