ETV Bharat / state

வேளான் சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

வேளான் சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை பாரிமுனை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளான் சட்டதிருத்த மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Sep 21, 2020, 11:27 PM IST

சென்னை: வேளான் சட்ட திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை பாரிமுனை பகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், இளைஞர்கள், பெண்கள், மாணவர் அமைப்பினர் என ஏராளமானோர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கங்களின் பொதுச்செயலாளர் சண்முகம் கூறுகையில், " விவசாயிகளுக்கு எதிரான இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அதற்கு துணை போகும் முதலமைச்சர் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டு, பதவி விலக வேண்டும்.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் இந்தியா விவசாயத்தை கார்ப்பரேட் ஆக்கிரமித்துக் கொள்ளும். இந்த சட்டத்தில் குறைத்தபட்ச ஆதார விலை பற்றியோ, அரசாங்க கொள்முதல் பற்றியோ ஏதும் குறிப்பிடவில்லை.

அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால் ரேஷன் கடைகளில் தானியங்கள் கிடையாது. ரேஷன் கடைகளில் தானியங்கள் இல்லை என்றால் மக்களுக்கு தானியம் கிடைக்காது. விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுக்கு மேல் 50 விழுக்காடு உயர்த்தி வழங்குவோம் என்று கூறிய மோடி, தேர்தலில் வெற்றி பெற்று 6 ஆண்டுகள் கடந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றிவிட்டார்.

இந்த மசோதாக்களை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மசோதாக்களை திரும்பப் பெறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும், வரும் செப்டம்பர் 25ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட 500 இடங்களில் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டதில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்தார்.

வேளான் சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அதனைத்தொடர்ந்து கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது காவல் துறையினரையும் தாண்டி பேரணியாக சென்றவர்களை வலுக்கட்டாயமாக இழுத்த காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர், மத்திய மாநில அரசுகளை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர், போராட்டக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டனர்.

இதையும் படிங்க: குடிநீர் தட்டுபாட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.