ETV Bharat / state

வடபழனி அருகே கார் விபத்து: கல்லூரி மாணவர் பலி - chennai district news

சென்னை: வடபழனி 100 அடி சாலை பெரியார் பாதை சந்திப்பு அருகே கார் விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வடபழனி அருகே கார் விபத்து
வடபழனி அருகே கார் விபத்து
author img

By

Published : Nov 3, 2020, 3:32 PM IST

சென்னை வானகரம் நும்பல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது வாசீம் (20). இவர் மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று (நவ.02) இரவு மாணவர் முகமது வாசீம் தனது அண்ணன் முகமது காசீம் உடன் காரில் வடபழனி நோக்கி சென்றார். வடபழனி 100 அடி சாலை பெரியார் பாதை சந்திப்பு அருகே அவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, இருசக்கர வாகனம் ஆகியவை மீது மோதி விபத்துக்குள்ளானது.

வடபழனி அருகே கார் விபத்து

இந்த விபத்தில் மாணவர் முகமது வாசீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது அண்ணன் முகமது காசீம் லேசான காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் மாணவர் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த முகமது காசீமை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மாணவர் அதிவேகமாக காரை ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் - இருவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.