ETV Bharat / state

தீ பிடித்து எரிந்த கல்லூரி பேருந்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள் - தீ பிடித்து எரிந்த கல்லூரி பேருந்து

தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 35 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திடீரென தீ பிடித்து எரிந்த கல்லூரி பேருந்து

author img

By

Published : May 12, 2022, 7:12 AM IST

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி பேருந்தில் நேற்று (மே 11) மாலை 35 மாணவர்களை ஏற்றிக் கொண்டு தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் அருகே சென்றபோது கல்லூரி பேருந்தின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது.

இதையடுத்து ஓட்டுநர் எபினேஷ் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி பார்த்துள்ளார். அப்போது திடீரென பேருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஓட்டுநர், பேருந்துக்குள் இருந்த மாணவர்களை இறங்குமாறு கூறினார்.

திடீரென தீ பிடித்து எரிந்த கல்லூரி பேருந்து

மாணவர்களும் பதறியடித்தபடி பேருந்தில் இருந்து வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனடியாக ஓட்டுநர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

உரிய நேரத்தில் ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்தி பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீ விபத்துக்குள்ளான கல்லூரி பேருந்து வாகன புதுப்பிப்பு சான்று கடந்த 5 தினங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ அலுவலகத்தில் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கல்லூரியில் கஞ்சா அடித்த மாணவர்கள் - கையும் களவுமாக பிடித்த காவல் துறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.