2018-2019 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-யின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில், " தமிழ்நாட்டில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அனைத்தும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும்" என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கிவரும் 41 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், முதற்கட்டமாக 1995-96ஆம் ஆண்டு முதல் 2010-11ஆம் ஆண்டுவரை தொடங்கப்பட்ட 14 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டது.
மீதமுள்ள 27 பல்கலைக்கழக உறுப்ப கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை, அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்து தற்போது தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், "அரசாணைகளில் தோற்றுவிக்கப்பட்ட 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் அனைவருக்கும் ஊதியம்/ மதிப்பூதியத்திற்கான செலவினத் தொகையினை சார்ந்த பல்கலைக்கழகங்களே இக்கல்வியாண்டு வழங்க வேண்டும் என்றும், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக 2020-21ஆம் கல்வியாண்டு முதல் மாற்றம் செய்தும் தமிழ்நாடு அரசு ஆணையிடுகிறது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொறியியல் மாணவர்களுக்கு ஏப்ரல் வரை ஆன்லைன் வகுப்புகள்