சென்னை: ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவின் தலைநகர் அட்டீஸ் அபாபா நகரிலிருந்து, சென்னை வந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகளிடம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையில் ஈடுட்டனர். அப்போது அங்கோலா நாட்டைச் சேர்ந்த பிபியனா டா கோஸ்டா என்ற பெண்மனியின் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த பெண்ணை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதித்தனார். அப்போது அந்த பெண்ணின் கைப்பையில் கொக்கைன் போதைப்பொருள் சிக்கியது. இவற்ற பறிமுதல் செய்த அலுவலர்கள் அந்த பெண்ணையும் கைது செய்தனர்.
முதல்கட்ட தகவலில் பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் போதைப்பொருளின் எடை 1.183 கிலோ என்பதும் இதன் சர்வதேச மதிப்பு ரூ.11.41 கோடி என்பதும் தெரியவந்துள்ளது. அதோடு அந்த பெண்ணுக்கும் சர்வதேச போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்பிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட விலங்குகள் சென்னையில் பறிமுதல்