ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள்: முதலமைச்சர் பழனிசாமி - Latest Chennai News

சென்னை: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

cm-women-health-welfare
cm-women-health-welfare
author img

By

Published : Mar 24, 2020, 4:54 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அதில், ''பொது மக்களுக்கு அவசர காலங்களில் உயிர் காப்பதில் சிறப்பாக சேவை செய்து வரும் 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவையை மேலும் வலுப்படுத்துவதற்காக, நடப்பாண்டில் 500 புதிய அவசர கால ஊர்திகள் 125 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும்.

கிராமப்புற வளரிளம் பெண்களுக்கிடையே தன் சுத்தத்தை ஊக்குவிக்க மாதவிடாய் கால சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 37.47 கோடி ரூபாய் செலவில் நகர்ப்புறத்தில் பயிலும் பள்ளி மாணவியர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் பெண்களுக்கும் சானிடரி நாப்கின்கள் வழங்கப்படும்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், கடினமான அறுவை சிகிச்சைகளை துல்லியமாகவும், விரைவாகவும், உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் சிறப்பான சிகிச்சையளிக்க நவீன அறுவை சிகிச்சை மையம் 34.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ராணிப்பேட்டை வருவாய் மாவட்டத்திற்கு, புதிய சுகாதார மாவட்டம் மூன்று கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்'' என அறிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா சிறப்பு சிகிச்சை: மருத்துவர், செவிலியருக்குச் சிறப்பு ஊதியம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.