ETV Bharat / state

'மக்கள் நம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பினை வைத்துள்ளனர்... அலுவலர்கள் அதனைப்பூர்த்தி செய்ய வேண்டும்' - முதலமைச்சர் ஸ்டாலின்!

மக்கள் நம் மீது அதிகமான அளவிற்கு, மிகப்பெரிய எதிர்பார்ப்பினை வைத்துள்ளனர் என்றும்; அதனைப் பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் பணி சிறப்பாக அமைய வேண்டும் என்றும் அரசுத் துறை செயலாளர்கள் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

cm-stalin-says-people-have-high-expectations-of-us-so-we-have-to-fulfill-it மக்கள் நம் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பினை வைத்துள்ளனர்.. அதிகாரிகள் அதனை பூர்த்தி செய்ய வேண்டும் - ஸ்டாலின்

author img

By

Published : Jun 1, 2022, 7:35 PM IST

சென்னை: அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (ஜூன்.1) நடைபெற்ற துறைச்செயலாளர்களுடனான முதல் நாள் ஆய்வுக் கூட்டத்தின் இறுதியில் பேசிய முதலமைச்சர், "ஒரு சில துறைகளில், சில குறிப்பிட்ட திட்டங்களின் செயல்பாட்டில் தாமதத்தினை சரி செய்து, அவற்றின் செயல்பாட்டினை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவை தொடர்பாக அலுவலர்கள் சிறப்புக் கவனம் செலுத்திட வேண்டும்.

மேலும் நான் பல மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்யும்போது பார்க்கிறேன். மக்கள் நம் மீது அதிகமான அளவிற்கு, மிகப் பெரிய எதிர்பார்ப்பினை வைத்துள்ளனர். அதனை பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் பணி சிறப்பாக அமைய வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு, குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில் எந்தவிதமான தொய்வும், தாமதமும் இன்றி நீங்கள் பணியாற்றிட வேண்டும்", என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர், ‘உதாரணமாக, நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம், சாலை அமைத்தல், குடிநீர்த்திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் அதிக அளவில் தனிக் கவனம் செலுத்தி, குறிப்பிட்ட காலத்தில் அவற்றை நிறைவேற்றிட வேண்டும் எனவும்; கூடுமான வரையில், அனைத்துத் துறைகளும் திட்டங்களை நிறைவேற்றும்போது, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைச் செயல்படுத்த வேண்டும்’ எனவும் கூறினார்.

அதேபோல் முதலமைச்சர் ’மாநிலத்தின் வளர்ச்சி என்பது புதிய தொழில்நுட்பங்களை எந்த அளவிற்கு நீங்கள் திட்ட செயலாக்கங்களிலும், கண்காணிப்புகளிலும் புகுத்துகிறீர்கள் என்பதில்தான் அமைந்திருக்கிறது. ஆண்டாண்டு காலமாக செய்து வருவதையே தொடர்ந்து செய்துவந்தால், புதிய மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படாது என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்.

மக்கள் நம் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பினை வைத்துள்ளனர்.. அதிகாரிகள் அதனை பூர்த்தி செய்ய வேண்டும் - ஸ்டாலின்
மக்கள் நம் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பினை வைத்துள்ளனர்.. அலுவலர்கள் அதனைப் பூர்த்தி செய்ய வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

தற்போது இந்த அரசின் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். முதலாம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், இன்னும் சில அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட வேண்டியுள்ளது. அரசாணைகளை வெளியிடுவது என்பது, திட்டச் செயலாக்கத்தில் முதல் படி மட்டுமே என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

போதுமான நிதி ஒதுக்கீட்டுடன் அரசாணைகள் வெளியிடப்பட்ட பின்னர், துறைத்தலைவர்கள் எவ்வித தாமதமும் இன்றி, அவற்றை நடைமுறைப்படுத்தி, மக்களிடம் திட்டங்களின் பயன்களைக் கொண்டுபோய்ச் சேர்த்திட வேண்டும். அதுதான் மிகவும் முக்கியமானது.
அதிலும் மிக முக்கியமானது – “கள அளவில் ஆய்வுகள்” மேற்கொள்வதாகும்’ என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், "இவை ஒவ்வொன்றிலும் மாவட்ட ஆட்சியர்களை ஈடுபடச் செய்து, அனைத்து திட்டங்களையும் நீங்கள் நிறைவேற்றிட வேண்டும். பேருந்து நிலையத் திட்டங்கள், குடிநீர் மற்றும் சாலைத் திட்டங்கள், வீட்டு வசதி மற்றும் வேலைவாய்ப்புத் திட்டங்கள் போன்றவை எல்லாம் மக்கள் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய திட்டங்கள் ஆகும். அவற்றை நீங்கள் சிறப்பாக நிறைவேற்றிட வேண்டும்.

அதேபோல், அரசின் சேவைகளான பல்வேறு சான்றிதழ்கள், கட்டட அனுமதி, பதிவுகள் மற்றும் உரிமங்கள், தடையின்மைச் சான்றிதழ்கள் போன்றவற்றை வழங்குவதில், கணினி தொழில்நுட்ப வசதியினைப் பயன்படுத்தி, அவை தாமதமின்றி வழங்கப்படுவதை துறைத் தலைவர்களாகிய நீங்கள் கள அளவில் ஆய்வு செய்து, உறுதி செய்திட வேண்டும். அப்போதுதான் நாம் அரசு நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தி, அரசுத் திட்டங்களை மக்களுக்கு முழுமையாகக் கொண்டு சென்றதாகக் கருத முடியும்.

எனவே, மிகப் பெரிய உட்கட்டமைப்பு திட்டமாக இருந்தாலும் சரி; எளிய ஒரு சேவைத் திட்டமாக இருந்தாலும் சரி, நீங்கள் அனைவரும், ஒரே அர்ப்பணிப்பு உணர்வுடன் – இது மக்களுக்கான திட்டம்; இதனை விரைவில், செம்மையாக மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன், உங்கள் துறை அமைச்சருடன் இணைந்து, துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களை வழிநடத்தி, திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும்", எனவும் கேட்டுக் கொண்டார். அடுத்த ஆய்வுக்கூட்டத்தில், இந்த திட்டங்களின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்ற அந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.