ETV Bharat / state

இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகள் - முதலமைச்சர் ஸ்டாலின்!

புனித ரமலான் மாதம் முழுவதும் தங்கள் நோன்புக் கடமையை ஆற்றி, ஏழை எளியவருக்கு உதவிகள் புரிந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகளை உலகுக்கு வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈகைப் பண்பின் இன்னுருவாக விளங்கும் இசுலாமியப் பெருமக்களுடன் என்றும் தோளோடு தோள் நிற்கும் இயக்கம் திராவிட இயக்கம் cm-stalin-said-heartfelt-ramadan-greetings-to-all-people-of-islamic-community இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகள் - முதலமைச்சர் ஸ்டாலின்..

author img

By

Published : May 2, 2022, 3:41 PM IST

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மே 3ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட வேண்டும் என தலைமை காஜி முப்தி முகம்மது சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார். ஷவ்வால் பிறை தென்படாததால் நாளை மே 3ஆம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை காஜி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரமலான் திருநாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'புனித ரமலான் மாதம் முழுவதும் தங்கள் நோன்புக் கடமையை ஆற்றி, ஏழை எளியவருக்கு உதவிகள் புரிந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகளை உலகுக்கு வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதலமைச்சர் ஸ்டாலின் ரமலான் வாழ்த்து!
முதலமைச்சர் ஸ்டாலின் ரமலான் வாழ்த்து!

"நீங்கள் உண்மையையே பேசுங்கள். அது அழிவைத் தந்தாலும் முடிவில் வெற்றியையே தரும்", “பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்” என நபிகளார் போதித்த உயரிய வாழ்க்கை நெறிகளையும் பண்புகளையும் கடைப்பிடித்து ஒழுகும் - ஈகைப் பண்பின் இன்னுருவாக விளங்கும் இசுலாமியப் பெருமக்களுடன் என்றும் தோளோடு தோள் நிற்கும் இயக்கம் திராவிட இயக்கம்.

ரமலான் இஃப்தார் நிகழ்வை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
ரமலான் இஃப்தார் நிகழ்வில் முதலமைச்சர்

அவர்களது உற்றத்தோழனாக, சிறுபான்மையினரின் காவலராக, அவர்களில் ஒருவராகவே நம் நெஞ்சில் வாழும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் விளங்கினார். எண்ணற்ற நலத்திட்டங்களைக் கழக ஆட்சி அமைத்தபோதெல்லாம் சிறுபான்மையினர் நலனுக்காக நிறைவேற்றினார்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்

அந்தச் சாதனைகளின் பட்டியலை அணி வகுத்தாற்போல் சொல்லிட வேண்டுமென்றால், 1969-ல் மிலாதுநபிக்கு முதன்முதலில் அரசு விடுமுறை; உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது; இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பயனடைய "சிறுபான்மையினர் நல ஆணையம்" தொடங்கியது; ஓய்வூதியம் பெற்று வந்த 2000 உலமாக்களின் எண்ணிக்கையை 2400 வரை உயர்த்தியது; முதன் முறையாக வக்பு வாரியச் சொத்துகளைப் பராமரிப்பதற்கென 40 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்காக , `தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்” “உருது அகாடமி” உள்ளிட்டவற்றை தொடங்கியது. "காயிதே மில்லத் மணிமண்டபம்" அமைத்திட நிதி ஒதுக்கி, அடிக்கல்லும் நாட்டி கட்டி முடிக்க நடவடிக்கை எடுத்தது -அனைத்து சாதனைகளுக்கும் முத்தாய்ப்பாக, 2007இல் இஸ்லாமியர்களுக்குப் பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காட்டில் 3.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியது என்று தலைவர் கலைஞர் அவர்களுக்கும், இஸ்லாமிய சமுதாயத்தினருக்குமான உறவு என்றைக்கும் நீடித்து நிலைத்து நிற்கவல்லது.

அந்த உறவின் தொடர்ச்சியாகத்தான் திராவிட முன்னேற்றக் கழக அரசும் சிறுபான்மை மக்களின் அரணாகத் தொடர்கிறது. முதன்முறையாக 5 மாவட்டங்களில் மாவட்ட சிறுபான்மை நல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்துக்கு ஒரு மகளிர் சங்கம் என்பதைத் தளர்த்தி, ஒன்றுக்கும் மேற்பட்ட மகளிர் உதவும் சங்கங்கள் ஆரம்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகள் - முதலமைச்சர் ஸ்டாலின்..

பெரும்பான்மைவாதமும் மதவாதமும் தலைதூக்காத சமய நல்லிணக்கப் பூங்காவாகத் தமிழ்நாட்டைக் காத்து நிற்கும் "திராவிட மாடல்" ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஒற்றுமையுணர்வும் சகோதரப் பாசமும் நிலைத்திருப்பதால்தான் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

இஸ்லாமிய மக்களின் சமூக - பொருளாதார முன்னேற்றத்துக்காகப் பல திட்டங்களை அளிக்கும், அவர்களுக்கு ஒரு சோதனை என்றால் அவர்களுக்குத் துணை நிற்கும் காவலாக விளங்கி வரும் நமது அரசின் சார்பில் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது புனித ரமலான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'தமிழ் இனத்தை சாதி, மதத்தால் பிரிப்பதைத் தமிழர்கள் அனுமதிக்கக்கூடாது' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்தார் விழாவில் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.