ETV Bharat / state

வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் - இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்தவர்

ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று போர் வீரர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு  நிதி

author img

By

Published : Nov 30, 2021, 8:12 PM IST

சென்னை: ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று வீரர்களின் வாரிசுதாரர்களை நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்து, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த படைவீரர் கே. ஏகாம்பரம் மனைவி இ. குமாரி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தைச் சேர்ந்த படைவீரர் கே. கருப்பசாமி மனைவி ஆர். தமயந்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த படைவீரர் பி.பழனிகுமார் மனைவி ஜி. பாண்டியம்மாள் ஆகியோருக்கு முதலமைச்சர் கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதி

மேலும், லடாக் - காரகோரம் கணவாயிலிருந்து மலரி வரை (ஜோஷிமத், உத்ரகாண்ட் மாநிலம்) பனிச்சறுக்கு மூலம் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற குழுவில் பங்கேற்ற முதல் தமிழ்நாட்டு ராணுவ வீரரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கேப்டன் எஸ். குபேர காந்திராஜ் (IC-80931P) சாதனையைக் கௌரவித்து முதலமைச்சர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

கேப்டன் எஸ்.குபேர காந்திராஜ் பாராட்டுச் சான்றிதழ்

இந்நிகழ்வில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, பொதுத்துறைச் செயலாளர் டி. ஜெகநாதன், பொதுத்துறை சிறப்புச் செயலாளர் வி. கலையரசி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுனர் மகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.