தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மாவட்டங்கள் 3 வகையாகப் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் அங்கு ஊரடங்கு நீடித்து வருகிறது.
மற்ற 23 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளுடனும் ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று(ஜூன்.25) காலை 11 மணியளவில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
- 11 மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி தளர்வுகள் வழங்க வாய்ப்பு, பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும்
- திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் உறவினர்கள் பங்கேற்பதில் உள்ள எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு.
- சிறிய கோவில்கள் திறப்பதற்கு அனுமதி வழங்க வாய்ப்பு.
- 23 மாவட்டங்களிலும் 50% நகரப்பேருந்துகள் இயக்க வாய்ப்பு.
- பெரிய கடைகளை குளிர்சாதன் வசதி இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் இயங்க அனுமதி.
- நூலகம், அருங்காட்சியகத்தை திறக்க வாய்ப்பு.
- ஜவுளி மற்று நகைக்கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க அனுமதி.
- 11 மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க வாய்ப்பு
இவை அனைத்தும் நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி, செயல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு இன்று(ஜூன்.24) மாலை அல்லது நாளை காலை வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாலிடெக்னிக் கல்லூரியில் சேர ஆன்லைனில் பதிவு இன்று தொடக்கம்