ETV Bharat / state

ஜெயலலிதாவின் பிறந்தநாள் மாநில பெண்கள் பாதுகாப்புத் தினமாக அனுசரிக்கப்படும்! - முதலமைச்சர் அறிவிப்பு

author img

By

Published : Feb 19, 2020, 1:27 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண்கள் பாதுகாப்பு நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார்.

cm palanisamy
cm palanisamy

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி 2020 -2021ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டு, பின் பிப்.17ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இன்று சட்டப்பேரவை கூடியதும் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, 110ஆவது சட்டப்பேரவை விதியின் கீழ் உள்ள முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவை பின்வருமாறு:

அரசு இல்லங்களில் ஆதரவற்ற பெண்களுக்கு 21 வயது நிறைவடையும்போது 2 லட்சம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண்கள் பாதுகாப்பு நாளாக அனுசரிக்கப்படும்.

பெற்றோர் மற்றும் பாதுகாவலர் இல்லாத பெண் குழந்தைகள் 18 வயது நிறைவுசெய்து அரசு இல்லங்களிலிருந்து வெளியேறிய பின்னர் அவர்கள் பாதுகாப்பு, பொருளாதார நிலைக்கேற்ப சிறப்பு உதவித் தொகுப்பினை அரசு வழங்கும். அந்தத் தொகுப்பில் மேல் கல்வி பயில்வது, கிராம மேம்பாட்டுப் பயிற்சி, சுய தொழில் செய்ய ஏதுவாக உதவிகள் ஆகியவை அடங்கும். அப்பெண்கள், 50 வயது நிறைவு செய்யும் வரை இந்த உதவிகள் வழங்கப்படும்.

ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்கும் வளர்ப்பு பெற்றோர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு மாதம் ஒரு முறை இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது. இதனைத் தற்போது தற்போது ஐந்து ஆண்டுகளாகவும், நான்காயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

பெண்களின் பாலின விழுக்காட்டை உயர்த்த, சிறப்பாகச் செயல்படும் மூன்று மாவட்டங்களுக்குத் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

ஆதரவற்ற இல்லங்களில் வளரும் குழந்தைகளுக்கு வயது, கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசுப் பணியில் சேர முன்னுரிமை வழங்கப்படும்.

உலமாக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத் தொகை 1,500 ரூபாயிலிருந்து மூவாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

தமிழ்நாடு வக்ஃபு வாரியம் சென்னையில் ஒதுக்கீடு செய்யும் நிலத்தில் ஒரு ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ரூபாயினை அரசு ஒதுக்கீடு செய்து புதிய கட்டடம் கட்டப்படும்.

வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க 25,000 ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 விழுக்காடு பணம் வழங்கப்படும். இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

இதையும் படிங்க: சிஏஏவை வாபஸ் பெறவிட்டால் போராட்டம் தொடரும்! - திருச்சி மைதானத்தில் அதிரும் முழக்கம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.