ETV Bharat / state

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை: விமான கட்டணம் உயர்வு - தமிழ்நாடு செய்திகள்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை காரணமாக விமான கட்டணம் பலமடங்கு உயர்ந்தது.

விமான கட்டணம் உயர்வு
விமான கட்டணம் உயர்வு
author img

By

Published : Dec 23, 2022, 6:50 AM IST

சென்னை: கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையும் டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை விடப்படுகிறது. தொடர் விடுமுறை காரணமாக அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதிலும், வெளிநாடுகளுக்கு செல்வதிலும் ஆர்வமாக உள்ளனர். சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளன. இதனால் ரயில்கள், பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவுகள் முடிந்து விட்டன. வெளியூர் செல்லும் பயணிகள் தற்போது விமான நிலையத்தை நோக்கி கவனத்தை திருப்பி உள்ளனர்.

சென்னையில் இருந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. மதுரைக்கு நாள் ஒன்றுக்கு வருகை, புறப்பாடு என 10 முதல் 12 விமானங்கள் இயக்கப்பட்டன. தற்போது 14 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் தூத்துக்குடிக்கு 6 ஆக இருந்த விமானங்கள் 8 ஆகவும், கோவைக்கு 10-இல் இருந்து 16 ஆகவும், திருச்சிக்கு 6-இல் இருந்து 8 ஆகவும், கொச்சிக்கு 10-இல் இருந்து 12 ஆகவும், திருவனந்தபுரத்துக்கு 4 ஆக இருந்த விமான சேவைகள் தற்போது 6 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளன.

விமான கட்டணங்களும் பலமடங்கு உயர்ந்தது. தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.5,300 வரை இருந்த விமான கட்டணம் தற்போது ரூ.14,500 வரையும், மதுரைக்கு ரூ.3,600 ஆக இருந்த கட்டணம் ரூ.14 ஆயிரமாகவும், கோவைக்கு ரூ.3,500 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.13,500 வரையும், திருச்சிக்கு ரூ.3,500 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.10 ஆயிரம் வரையும், கொச்சிக்கு ரூ.3,500 என இருந்த கட்டணம் தற்போது ரூ.19,500 வரையிலும், திருவனந்தபுரத்துக்கு ரூ.5,150 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.21 ஆயிரம் வரையிலும் அதிகரித்துள்ளன.

இதையும் படிங்க: ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.