கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று(ஏப்ரல்.23) காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். அதில், தமிழ்நாடு சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றார்.
இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதைத் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து எடுத்துரைத்தார்.
இந்தச் சந்திப்பின்போது, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி ஆகியோர் உடனிருந்தனர். மேலும், தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பெருந்தொற்று நெருக்கடிக்கு இடையில் வாக்கு எண்ணிக்கை; கட்டுப்பாடுகள் என்னென்ன!