தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது கரோனா ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகள் படிப்படியாக அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாவட்டங்களில் கரோனா நிலவரம் குறித்தும், அங்கு எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தலைமைச் செயலர் சண்முகம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் கரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், குடியரசு தினத்தன்று மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:கரோனா போரில் அண்டை நாடுகளுக்கு ஆதரவு கரம் நீட்டிய இந்தியா:உலக சுகாதார அமைப்பு பாராட்டு