சென்னை: கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் கீழ் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ரூ. 14 கோடி செலவில் பூங்கா, வணிக வளாகங்கள், பேருந்து நிறுத்தம், வாகன நிறுத்தும் வசதி, திறந்தவெளி உணவருந்துமிடம், 56 கடைகள், கழிவறைகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இவை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் வெளியூர்களிலிருந்து சென்னை வரும் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி ஆலந்தூர் மெட்ரோ ரயில் பயணிகள், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் புறநகர் பகுதிகளான தாம்பரம், பூந்தமல்லி மார்க்கம் வழியாக செல்ல ஏதுவாக பேருந்து நிறுத்தம் அமைக்கப்படுகிறது.
கட்டுமானப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு
சுமார் 5.9 லட்சம் சதுர அடி பரப்பளவிலான இந்த இடத்தில், 1.45 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கிட்டத்தட்ட நிறைவு பெறும் தருவாயில் உள்ள இந்த கட்டுமானப் பணிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.8) நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து திட்டப் பணிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை