சென்னை: அண்ணா அறிவாலயத்தில், இன்று (17.12.2022) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனமானப் பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள மூன்று நாள் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டார்.
பேராசிரியர் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியில், அவரின் இளமைக்கால புகைப்படங்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடனான புகைப்படங்கள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடனான புகைப்படங்கள், பேராசிரியர் அமைச்சராக பதவியேற்ற நிகழ்வுகள், பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் பேராசிரியரின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, பேராசிரியரின் மகன் அ. அன்புச்செல்வன், பேரனும் சட்டமன்ற உறுப்பினருமான அ. வெற்றியழகன், புகைப்படக் கண்காட்சி ஏற்பாட்டாளர் கோவை சுப்பு மற்றும் பேராசிரியர் அவர்களின் குடும்பத்தினர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ’இனி வாரிசும் நாங்க தான், துணிவும் நாங்க தான்: ரெட் ஜெயண்ட் அதிரடி முடிவு