சென்னை: அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் திருவண்ணாமலை செல்லவுள்ளார். இதற்காக நாளை (ஜூலை 8) காலை சென்னையிலிருந்து புறப்பட்டு அவர் செங்கல்பட்டு மாவட்டம் வழியாக, 12:30 மணி அளவில் கீழ்பெண்ணாத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.
பின் ஒரு மணி அளவில் திருவண்ணாமலை சென்று ஓய்வு இல்லத்தில் ஓய்வு எடுக்கும் முதலமைச்சர், மாலை 6:30 மணியளவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார்களுக்கு ஆடைகளை வழங்குகிறார்.
அதைத்தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா நுழைவாயில் திறப்பு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்குகிறார். அன்று இரவு திருவண்ணாமலையில் தங்குகிறார்.
அதைத்தொடர்ந்து ஜூலை 9ஆம் தேதி காலை மருத்துவக் கல்லூரி திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர், அன்று பிற்பகல் சென்னை திரும்புகிறார்.
இதையும் படிங்க: விபத்துகளில் உயிரிழந்த கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.3 கோடி நிவாரணம்