ETV Bharat / state

அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் உயிரிழப்பு: நிவாரணம், வீடு வழங்க முதலமைச்சர் உத்தரவு - Stalins order on the death of the boy

செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் உயிரிழப்பு விவகாரத்தில் அந்த சிறுவனின் தாயாருக்கு நிவாரணம் மற்றும் வீடு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 6, 2023, 8:33 PM IST

சென்னை: செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன் செல்வன் கோகுல்ஸ்ரீ. கடந்த டிசம்பர் 31, 2022அன்று மரணமடைந்ததைத் தொடர்ந்து, சிறுவனின் தாயார் திருமதி பிரியா அவர்களுக்கு இழப்பீடாக 7.5 லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவியாக 2.5 லட்சம் ரூபாயும் என மொத்தம் 10 லட்சம் ரூபாய் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

அதில், ''செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு நிதியுதவி மற்றும் வீட்டையும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் 6 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தாயார் பிரியாவுக்கு தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், அன்னை அஞ்சுகம் நகர் திட்டப்பகுதியில் தற்போது கட்டப்பட்டு முடிவுறும் நிலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒரு குடியிருப்பினை ஒதுக்கீடு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளார்.

இளைஞர் நீதி அமைப்பின் கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் அவர்கள் தலைமையில், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சார்பாக ஒரு பிரதிநிதியும் உள்ளடக்கிய உயர்மட்டக் குழு ஒன்று உருவாக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தாம்பரத்தில் அடுத்தடுத்து வந்த 3 கார்கள் மோதி விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.