சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவரும், கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினருமான மு.க ஸ்டாலின், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 5 இடங்களில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை, கல்வி உபகரணங்களை வழங்கினார்.
முதல் கட்டமாக கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பந்தர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல் நிலைபள்ளியில் 305 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை, நலத்திட்டங்களை வழங்கினார்.
கல்வி உதவி
இதையடுத்து அதே பகுதியில் அமைந்துள்ள லூர்து மேல் நிலை பள்ளியில் 400 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, நலத்திட்டங்ளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள எவர்வின் மேல்நிலைப்பள்ளியில் 430 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கினார்.
மேலும் கொளத்தூர் விவி நகரில் அமைந்துள்ள குருகுலம் மேல்நிலை பள்ளியில் 160 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நலத் திட்டங்களை வழங்கினார்.
ஏராளமான நிர்வாகிகள்
இறுதியாக ஜம்பு லிங்கம் மெயின் ரோடு, ஜி கே எம் காலணி விளையாட்டு மைதானத்தில் 290 மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, திருவிக நகர் சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி, கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் வகுப்பு