ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட் போட்டி; பணிகளை துரிதப்படுத்த ஸ்டாலின் அறிவுறுத்தல் - ஸ்டாலின்

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள மாமல்லபுரம், பூஞ்சேரி கிராமத்தில் அரங்குகளின் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று 44-வது  செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

author img

By

Published : Jul 12, 2022, 4:19 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் மாமல்லபுரம், பூஞ்சேரி கிராமத்தில், போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பான சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள், உயர் அலுவலர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் அடங்கிய பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்ற சிறப்பு ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து, மாவட்டங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அமைப்பாளர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக வழங்கிட வேண்டும் என்றும், இச்சதுரங்க விளையாட்டு போட்டிகளை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் போட்டி நடைபெறும் அரங்குகளில் டிஜிட்டல் போர்டுகளை வைத்திட வேண்டும் என்றும், விளையாட்டு போட்டி நடைபெறவுள்ள அரங்குகளின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் பூஞ்சேரி கிராமத்தில், போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், 52,000 சதுர அடியில் சதுரங்க விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டு வருகின்ற நவீன உள் விளையாட்டரங்கம், ஏற்கனவே அப்பகுதியில் உள்ள 22,000 சதுர அடியிலான அரங்கத்தினை விளையாட்டரங்கமாக மேம்படுத்தும் பணி, வாகனங்கள் நிறுத்துமிடம், சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருவது குறித்தும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

44வது சர்வதேச சதுரங்கப் போட்டி, பல்லவர் காலச் சிற்பக் கலையினை பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை மிகச் சிறப்புடன் நடைபெற உள்ளது.

இப்போட்டியில், 187 நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டிற்கு வருகை தரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வரவேற்க மிகச் சிறப்பான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. வெளி நாடுகளிலிருந்து வருகின்ற வீரர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய நட்சத்திர விடுதிகளில் 2,000 அறைகள் மற்றும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இப்போட்டிக்கான தொடக்க விழா மிகப் பிரம்மாண்டமாக சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் 28.7.2022 அன்று நடைபெற உள்ளது.
இப்போட்டியினை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு முதல் பங்களிப்பாக 92 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.

ஒலிம்பியாட் தீபம் நாற்பது நாட்களில் இந்தியாவில் 26 மாநிலங்களில் உள்ள 75 நகரங்களில் பயணித்து இறுதியாக மாமல்லபுரம் வந்தடைய உத்தேசிக்கப்பட்டுள்ளது. முக்கியப் பிரமுகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை கொண்டு 15 இடங்களில் ஒலிம்பியாட் தீபத்தினை வரவேற்று கலைநிகழ்ச்சிகளை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தனியார் பள்ளி வாகனங்களில் இது நம்ம சென்னை, நம்ம செஸ் ஸ்டிக்கர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.