சென்னையில் பெருங்களத்தூரிலிருந்து தாம்பரம் நோக்கி, எம் சாண்ட் (செயற்கை மணல்) ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. லாரியானது இரும்புலியூர் மேம்பாலம் மேல் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர், லாரியானது பாலத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் நல்வாய்ப்பாக ஓட்டுநர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்தால் போக்குவரத்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் வந்த காவல் துறையினர் லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சரி செய்தனர்.
இதனால் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அவினாசி கோர விபத்து: உயிரிழப்பு 20ஆக உயர்வு; மீட்புப் பணிகள் தீவிரம்