ETV Bharat / state

சென்னையில் இருந்து அந்தமான் சென்ற விமானம் ரத்து; பயணிகள் வாக்குவாதம் - chennai to andaman flight

சென்னையில் இருந்து 154 பயணிகளுடன் அந்தமான் புறப்பட்ட விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது.

சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்ட விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது
சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்ட விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது.
author img

By

Published : Jun 7, 2023, 7:37 PM IST

சென்னை: அந்தமானில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து, மோசமான வானிலை நிலவுவதால் சென்னையில் இருந்து 154 பயணிகளுடன் அந்தமான் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாமல் இன்று மாலை மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தது. மேலும் தொடர்ந்து அதே வானிலை நீடிப்பதால் அந்த விமானம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை காலை அந்த விமானம் மீண்டும், அந்தமான் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று மதியம் 12 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 154 பயணிகள் 6 விமான ஊழியர்களுடன் அந்தமான் புறப்பட்டு சென்றது. அந்த விமானம், அந்தமானை அடைந்தபோது அங்கு பலத்த சூறைக்காற்றுடன், கனமழை பெய்து கொண்டிருந்தது.

கனமழையுடன் இடி மின்னலுமாக காணப்பட்டதால் விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தது. வெகு நேரம் இதே சூழ்நிலை நீடித்திருந்ததால் விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டார். சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி உத்தரவிட்டனர்.

அதன்படி இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மாலை 5:10 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் வந்து தரை இறங்கியது. இதனை அடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மோசமான வானிலை காரணமாக இன்று விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.

மீண்டும் விமானம் நாளை காலை, சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்டு செல்லும் என்றும், பயணிகள் அனைவரும் இதே விமான டிக்கெட்டில் நாளை அந்தமான் பயணம் மேற்கொள்ளலாம் என்றும், விருப்பமில்லாத பயணிகள் பயணத்தை ரத்து செய்துவிட்டு, கட்டணத்தை திருப்பி பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தனர்.

இதை அடுத்து பயணிகள் சிலர் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள், மோசமான வானிலை காரணமாக விமானம் திரும்பி வந்தது. இதில் எங்கள் தவறு எதுவும் இல்லை என தெரிவித்தனர். மோசமான வானிலையின் காரணமாக விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது என அதிகாரிகளின் தரப்பு வாதத்தை புரிந்து கொண்டு சமாதானம் அடைந்து பெரும்பாலான பயணிகள், நாளை விமானத்தில் அந்தமான் செல்வதாக கூறி வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். ஒரு சில பயணிகள் மட்டும் டிக்கெட்டுகளை ரத்து செய்து, ரீபண்ட் வாங்கினர்.

இதற்கிடையே அந்தமானிலிருந்து இந்த விமானத்தில், சென்னை வருவதற்கு 162 பயணிகள், அந்தமான் விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக, விமானம் அந்தமானில் தரையிறங்காமல், சென்னைக்கு திரும்பி வந்து விட்டதால், சென்னை வரவேண்டிய 162 பயணிகளும் அந்தமான் விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னையில் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு.. கூடுதலாக 303 விமானங்கள் இயக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.