ETV Bharat / state

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: சென்னை எங்கே?

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வெளியானது. இதில் சென்னை மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

CBSE 10 Exam Results  10 Exam Results  Exam Results  10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்  சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்  சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்  10th result
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
author img

By

Published : Aug 3, 2021, 6:31 PM IST

Updated : Aug 3, 2021, 7:02 PM IST

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதன் முடிவுகள் சிபிஎஸ்இ குழுவின் அதிகாரப்பூர்வ வலைதளமான cbseresults.nic.in இல் கிடைக்கும்.

இது தவிர, digilocker.gov.in இணையத்திலும் தரவுகளைச் சரிபார்த்துக்கொள்ளலாம். இதற்கு மாணவர்களின் பட்டியல் எண் (ரோல்) அவசியம். மேலும், சிபிஎஸ்இ பாஸ் சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ்கள், இடம்பெயர்வு சான்றிதழ்களும் டிஜிலாக்கர் சேவையில் கிடைக்கும்.

மதிப்பீடு முறை

தேர்வின் மதிப்பீட்டுத் திட்டத்தின் படி, 20 மதிப்பெண்கள் பள்ளிகளால் நடத்தப்பட்ட உள் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டும், 10 மதிப்பெண்கள் அவ்வப்போது நடத்தப்பட்ட யூனிட் தேர்வுகளின் மதிப்பெண்களை கொண்டும், 30 மதிப்பெண்கள் அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களை கொண்டும், மீதம் உள்ள 40 மதிப்பெண்கள் மாணவர்களின் செயல்பாடுகளை கொண்டும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்

அந்த வகையில் இத்தேர்வில் சென்னையில் 99.94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று, மிகச் சிறப்பாக செயல்பட்டு உள்ளது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் 99.99 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து பெங்களூரில் 99.96 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்றவர்கள் சதவீதம் அடிப்படையில் பார்க்கும் போது சென்னை மூன்றாம் இடத்திலும், பெங்களூரு இரண்டாம் இடத்திலும், திருவனந்தபுரம் முதலிடத்திலும் உள்ளது.

இதையும் படிங்க: திறந்தநிலைப் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பு அரசுப்பணிக்கு செல்லுபடியாகும் - துணைவேந்தர் பார்த்தசாரதி

Last Updated : Aug 3, 2021, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.