ETV Bharat / state

Weather News: தென் தமிழ்நாடு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - Chennai regional meteorological centre weather report

கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தென் தமிழ்நாடு, மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு
மழைக்கு வாய்ப்பு
author img

By

Published : Jan 31, 2022, 2:21 PM IST

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜனவரி 31) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் நிலவும் கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழ்நாடு மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (பிப்ரவரி 1) வானிலை நிலவரம்

தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

பிப்ரவரி 2 முதல் பிப்வரி 4 வரை

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30, குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டம்மி ரூபாய் நோட்டுகளுடன் வந்து மனுத்தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.