சென்னை: தனியார் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி சுகாதரத்துறை இணை ஆணையர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது சுகாதாரத்துறையின் விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் இருக்கிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சென்னை ஜார்ஜ்டவுன் பகுதியில் உள்ள தனியார் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் சென்னை மாநராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சோதனை செய்தனர். அப்போது 3 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டன.
இது குறித்து சென்னை மாநகராட்சி சுகாதரத்துறை இணை ஆணையர் திவ்யதர்ஷினி கூறும்போது, தனியார் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கரோனா தொற்றுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 3 ஆசிரியர்களுக்கு கரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 3 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்புடையவர்களையும் பரிசோதனை செய்து வருகிறோம். ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆசிரியர்கள் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கவில்லை என்றார்.
சென்னை தனியார் பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கரோனா உறுதி - corona
தனியார் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கரோனா தொற்றுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 3 ஆசிரியர்களுக்கு கரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
![சென்னை தனியார் பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கரோனா உறுதி Chennai private school teachers](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10339706-690-10339706-1611317425296.jpg?imwidth=3840)