சென்னை அயனாவரம் குன்னூர் ஹைரோடு பகுதியைச் சேர்ந்தவர் தேவன் பரத் தோஷி. இவர் நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அந்தப் பதிவில் தனது தந்தை கால் டாக்ஸியை புக் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது, டாக்சியிலேயே செல்போனை மறந்துவிட்டதாக பதிவிட்டார். இப்போது அந்த கால் டாக்சி ஓட்டுநரின் அலைபேசி எண் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனால் காரின் பதிவு எண் மற்றும் ஓட்டுனரின் செல்போன் எண்ணை ஆகியவற்றைப் பதிவிட்டு செல்போனைக் கண்டுபிடித்து தரக்கோரி சென்னை காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்தார்.
இந்த ட்வீவிட்டை கண்ட காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், உடனே போக்குவரத்து காவல் துறையினருக்கும், காவல் குழுவினரின் சமூக வலைதள பக்கத்திற்கும் பகிர்ந்துள்ளார். இதனால் போக்குவரத்து காவலர்கள் தேவன் பரத் தோஷியிடம் தொலைந்த செல்போனின் ஐஎம்இஐ விவரங்களைப் பெற்று உடனே தொலைந்த செல்போன் எண்ணை டிராக் செய்துள்ளனர்.
செல்போன் சிக்னல் திருமங்கலம் அருகே காண்பித்ததால் திருமங்கலத்தில் வைத்து காவலர்கள் காரை மடக்கி செல்போனை மீட்டு தேவன் தோஷியிடம் ஒப்படைத்துள்ளனர். காணாமல் போன செல்போனை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து மீட்டுக் கொடுத்த காவல் ஆணையருக்கும், காவலர்களுக்கும் பரத் தோஷி நன்றியை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நான் பயன்படுத்திய ஓஎம்ஆர் சீட் இது இல்லை - கண்ணீர் வடிக்கும் கோவை மாணவர்