ETV Bharat / state

தீபாவளி பட்டாசு வெடிக்க போறீங்களா.. காவல் துறையின் அட்வைஸ் என்ன?

TN Police Instruction for bursting crackers: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்குமாறு சென்னை காவல்துறை சார்பில் கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளி பட்டாசு வெடிக்க தமிழக காவல்துறையின் கட்டுபாடுகள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 8:03 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகள் படியும், தமிழக அரசின் வழிகாட்டுதல் படியும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதற்கான கால அளவுகள், விதிமுறைகள் ஆகியவற்றை சென்னை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அதில் சுற்றுச்சூழலுக்கு உகந்த இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும். பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையிலும், இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரையிலும் என்று குறிப்பிட்ட 2 மணி நேரங்கள் ஒதுக்கியுள்ளதால், இந்த நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விதி 89-ன்படி, பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ அல்லது விற்கவோ கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ (வெடிப்பதோ) கூடாது. பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வைக்க கூடாது.

இருசக்கரம், 3-சக்கர மற்றும் 4-சக்கர மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும் பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இப்படியான முயற்சிகளில் ஈடுபடும் போது, வெடிக்கப்படும் அந்தப்பட்டாசுகள், அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும். எனவே பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக்கூடாது.

மக்கள் நடமாடும் இடத்தில் கவனக் குறைவாக பட்டாசுகளை வெடிக்க கூடாது. பட்டாசுகளை வெடிக்கும் போது தகரம் மற்றும் இரும்பு டப்பாக்களை போட்டு மூடி, வேடிக்கைப் பார்க்க கூடாது. குடிசைப் பகுதிகளிலும், மாடிக்கட்டிடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக் கூடாது. எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக்கூடாது. ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையில் வைத்து உலர்த்தக்கூடாது.

பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்க கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக்கூரைகள் உள்ள இடங்கள் அருகிலோ வானவெடிகளையோ அல்லது பட்டாசு வகைகளையோ கொளுத்துவதை தவிர்க்க வேண்டும். பட்டாசு விற்கும் கடைகள் அருகில் சென்று புகைபிடிப்பதோ, புகைத்து முடித்தபின் சிகரெட் துண்டுகளை அஜாக்கிரதையாக வீசி எறிவதோ கூடாது.

பட்டாசு விற்கும் கடை அருகே சென்று விளம்பரத்துக்காகவோ, போட்டிக்காகவோ பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. பட்டாசு விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மெழுகுவர்த்தியையோ பெட்ரோமாக்ஸ் அல்லது சிம்னி விளக்கையோ கடை அருகிலோ அல்லது கடையிலோ உபயோகிக்கக் கூடாது. பட்டாசு வகைகள் சேமித்து வைத்திருக்கும் வீட்டிலோ அல்லது கடைகளிலோ ஊதுவத்தி கொளுத்தி வைக்கக்கூடாது.

பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ அல்லது நெருப்பையோ உபயோகிப்பதை விட நீளமான ஊதுவத்தி உபயோகித்து ஆபத்துகளை தவிர்க்க வேண்டும். கால் நடைகள் அருகில் பட்டாசு வெடிப்பதால் அவைகள் மிரண்டு ஓடும்போது ஸ்கூட்டர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மீதும், பாதசாரிகள் மீதும் முட்டி விபத்துக்கள் நேரிடலாம் அதை தவிர்க்க வேண்டும்.

தீ விபத்துகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வெடிகள் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைத்து, சென்னை காவல்துறை அறிவித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும்.

மேலும், தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால், காவல்துறை அவசர உதவி 100, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்.108, தேசிய உதவி எண்.112 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொண்டு பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்கும்படி பொதுமக்களை சென்னை காவல்துறை கேட்டுக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழக அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு கடை நடத்தியது தொடர்பாக 14 வழக்குகளும், நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்ததற்காகவும், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்ததற்காகவும் 271 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.