ETV Bharat / state

சிசிடிவி பராமரிக்க ரூ.3.5 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்! - shankar jival

சென்னை முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்களை பராமரிப்பதற்காக மூன்றரை கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி கேமராக்களை பராமரிக்க மூன்றரை கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது - சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால்

author img

By

Published : Jun 9, 2023, 11:54 AM IST

சிசிடிவி கேமராக்களை பராமரிக்க மூன்றரை கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது - சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை: வேளச்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதற்கான கட்டுப்பாட்டு மையம் வேளச்சேரி காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ. 32 லட்சம் செலவில் 55 இடங்களில், வேளச்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதேபோன்று 24 லட்ச ரூபாய் செலவில், திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் 124 சிசிடிவி கேமராக்கள் 47 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கான சிசிடிவி கட்டுப்பாட்டு மையம் திருவான்மியூர் சிக்னல் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று (ஜூன் 8) சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.

பின்னர் இது குறித்து பேசிய சென்னை காவல் ஆணையர், “இந்த சிசிடிவி அமைக்கும் நிதியில் 6 லட்சம் ரூபாய் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கட்டுப்பாட்டு மையங்களில் இருந்து மொத்தமாக 274 சிசிடிவி காட்சிகளை இணையத்தின் மூலம் நேரலையாக காணும் வழியில் ஜி.பி.எஸ் தொழில்நுட்ப மேம்பாடு கொண்ட சிசிடிவி காட்சி பொருத்தப்பட்டுள்ளது”.

இது போன்று, கடந்த ஆண்டு மட்டும் 2,100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு 424 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது கண்ணாக சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதோடு மட்டுமல்லாமல், பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை பராமரிப்பதற்காக, தமிழக அரசு 3.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை முழுவதும் இருக்கும் 12 காவல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை பராமரிப்பதற்காக, தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் நியமிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சிறு குற்றங்கள் தொடங்கி பெரிய கொலை, கொள்ளை என அனைத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் சூழலில், அதை மொத்தமாக தடுத்து நிறுத்த முடியாவிடினும் அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு தான் இருக்கின்றன. குற்றங்கள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் காவல் துறையால் கண்காணிப்பில் ஈடுபட முடியாது.

குற்றவாளிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து, குற்ற செயல்களில் ஈடுபட புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றனர். எனவே, தற்போது குற்றங்களை பெருமளவில் தடுக்க முடியாவிடினும், குற்ற செயல்களில் ஈடுபட்டோரை விரைந்து பிடிக்க காவல் துறையின் மூன்றாவது கண்ணாக இந்த சிசிடிவி கேமராக்கள் பெரிதும் பயன்பட்டு வருகிறது. இத்தகைய பயன்படு சாதனத்தை பராமரிக்க அரசி எடுக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்க ஒன்றாக உள்ளது.

இதையும் படிங்க: Operation missing Children: 24 மணி நேரத்தில் 27 குழந்தைகள் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.