சென்னையில் இன்று (ஜூலை.02) காலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 100.13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்றைய விலையை விட 33 பைசா அதிகமாகும்.
டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் 93.72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தேர்தலுக்குப் பின் அதிகரிக்கும் விலை
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கச்சா எண்ணெய் காரணமா, கலால் வரி காரணமா?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை உயர்த்தபடுகிறது.
அதே நேரத்தில், சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது ஒன்றிய அரசு கலால் வரியை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க் திறப்பு!