சென்னையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையார் போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அண்ணா நகர், கோடம்பாக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,000ஐ கடந்துள்ளது.
இந்தப் பரவலைக் குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. மேலும் மக்களுக்கு தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நோய்த் தொற்று அதிகரித்து வந்தாலும் குணமடைத்தோரின் விழுக்காடு 90ஆக உள்ளது.
இதுவரையிலும் சென்னையில் மொத்தம் 1,42,603 நபர்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,28,580 நபர்கள் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 12,852 நபர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் 2,878 நபர்கள் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர்.
சென்னையில் கரோனா நோய் உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரின் மண்டலவாரி நிலைப் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது,
அதன்படி, மண்டலம் - சிகிச்சைப் பெற்று வருபவர்கள்
கோடம்பாக்கம் - 1183
அண்ணா நகர் - 1197
ராயபுரம் - 889
தேனாம்பேட்டை - 758
தண்டையார்பேட்டை - 575
திரு.வி.க. நகர் - 797
அடையாறு - 847
வளசரவாக்கம் - 847
அம்பத்தூர் - 814
திருவொற்றியூர் - 270
மாதவரம் - 415
சோழிங்கநல்லூர் - 409
பெருங்குடி - 544
ஆலந்தூர் - 702
மணலி - 157