கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பு, பிளீச்சிங் பவுடர் தெளிப்பு போன்ற பணிகளை சென்னை மாநகராட்சி பணியாளர்கள் செய்துவருகின்றனர்.
அத்துடன் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் கை, கால்களை சுத்தமாக கழுவ வேண்டும் போன்றவை குறித்து ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பரப்புரையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனையடுத்து சென்னை பெருநகர மாநகராட்சி கட்டடத்தின் எதிரில் உள்ள நான்கு சாலை சந்திப்பில் கரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இதில் தனித்திரு, விலகி இரு, வீட்டில் இரு என்ற வாசகத்துடன் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் நடந்து செல்வோர் உள்பட பலரும் விழிப்புணர்வு ஓவியத்தை பார்த்து செல்வதுடன் அதே போன்ற நடவடிக்கையை தொடர்ந்து பின்பற்றுவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.